ருத்ராட்ஷத்தின் - மகிமை
ருத்ராட்ஷத்தின் - மகிமை ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும். சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே? குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று ...