உலகத்தை வலம் வந்த கணபதி சிவபுராணம்

உலகத்தை வலம் வந்த கணபதி! சிவபுராணம்..! பார்வதி தேவி கணபதியிடம், எப்படி குமரா? உன்னால் மட்டும் இந்த உலகத்தை எங்கும் செல்லாமல் வலம் வர முடிந்தது என்று கேட்டார். அதற்கு கணபதி தன்னுடைய தந்தையான சிவபெருமானை வணங்கி, தந்தையே! தங்களிடம் இருந்து உருவானவை தானே வேதங்கள், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் உண்மை என்றால் நான் இந்த உலகத்தை வலம் வந்துள்ளேன் என்பது உண்மையே என்று கூறினார். இந்த உலகத்தை வலம் சென்று கனியை பெற வேண்டும் என்று எண்ணிய கந்தன் கூடுமானவரையில் தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றார். பின்னால் தம்முடைய தமையன் கணபதி இன்னும் வரவில்லையே என எண்ணினார். ஆனாலும், நிதானம் கொள்ளாமல் வேகத்தை அதிகப்படுத்தினார். இங்கு கைலாய மலையிலோ கணபதி, சிவபெருமானிடம் ஒருவர் தன்னை ஈன்றெடுத்த தாயையும், தந்தையையும் பூஜித்து அவர்களை வலம் வந்து வணங்கினால், இந்த உலகை வலம் வந்த பயனை அடைவார்கள் என்று வேதங்கள் உரைக்கின்றன என்று கூறினார். மேலும், ஒருவர் எங்கும் செல்லாமல், தீர்த்த யாத்திரை பயணம் மேற்கொண்டு புண்ணிய நதிகளில் நீராடிய பலனை தன்னுடைய வீட்டில் இருக்கும் தாய், தந்தையரை பூஜிப்பதாலும்,...