இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏ மஞ்ச பையே!எங்கே சென்றாய் எமை விடுத்து!

ஏ மஞ்ச பையே!எங்கே சென்றாய் எமை விடுத்து! எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த மஞ்சள் பையே எங்கே சென்றாய்! என் பாலபருவத்தில் மாசிமாதம் காரமடை தேர்த் திருவிழாவிற்கு சென்று வரும் என் பாட்டி வாங்கி வரும் அந்த கோவில் மிட்டாய்யையும், கடலை பொரியையும் சுமந்து வந்த மஞ்சப் பையே எங்கே போனாய்? திருமண வீட்டு நிகழ்விலிருந்து திரும்பும் போது  அந்த சாத்துக்கொடியையும்,தேங்காயையும் தாம்பூலமாய் சுமந்து வந்த மஞ்சப் பையே! எங்கே போனாய்? திருமண காலங்களிலும் சரி திருவிழாக் காலத்திலும் சரி வலம் வந்த மஞ்சப் பையே எங்கே போனாய்? விழா காலங்களிலும் திருமண ஜவுளியிலும் சரி ஓசியில் ஓரிரு பைகள் கேட்டு எம் பெற்றோர்கள் கையில் தவழ்ந்து வந்த மஞ்சப் பையே! எங்கே போனாய்? கதற கதற உனை பயன் படுத்தி கசாப்பு கடைக்கும் உன்னை சுமந்து சென்றார்களே! எம் முன்னோர்கள்!அது மட்டுமா! கடைசியில் உன்னை பார்த்தது அடுப்படி கரித் துணிக்கல்லவா! இத்துணை சிறப்பு பெற்ற மஞ்சப் பையே! நீ திரும்பி வா! போதும் உன் கோபம்! மக்கள் நெகிழிக் காகிதம் மீது நேசம் கொண்டு அகழியில் கிடக்கும் முதலைகளாய் அல்லல் பட்டதும் போதும்! நீ வலம் வரும் காலத்தில் ...

வழ்கவலிமையுடன்மகிழ்வாக வாழ பல வழிகள்

மகிழ்வாக வாழ பல வழிகள்... 1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள். 6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள். 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள். 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது! 10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள். 11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள். 12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள். 13. உங்களுக்குள் உன்ன...