ஏ மஞ்ச பையே!எங்கே சென்றாய் எமை விடுத்து! எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த மஞ்சள் பையே எங்கே சென்றாய்! என் பாலபருவத்தில் மாசிமாதம் காரமடை த...
ஏ மஞ்ச பையே!எங்கே சென்றாய் எமை விடுத்து!
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த மஞ்சள் பையே எங்கே சென்றாய்!
என் பாலபருவத்தில் மாசிமாதம் காரமடை தேர்த் திருவிழாவிற்கு சென்று வரும்
என் பாட்டி வாங்கி வரும் அந்த கோவில் மிட்டாய்யையும்,
கடலை பொரியையும் சுமந்து வந்த மஞ்சப் பையே எங்கே போனாய்?
திருமண வீட்டு நிகழ்விலிருந்து திரும்பும் போது அந்த சாத்துக்கொடியையும்,தேங்காயையும் தாம்பூலமாய் சுமந்து வந்த மஞ்சப் பையே!
எங்கே போனாய்?
திருமண காலங்களிலும் சரி
திருவிழாக் காலத்திலும் சரி வலம் வந்த மஞ்சப் பையே எங்கே போனாய்?
விழா காலங்களிலும்
திருமண ஜவுளியிலும் சரி ஓசியில் ஓரிரு பைகள் கேட்டு
எம் பெற்றோர்கள் கையில் தவழ்ந்து வந்த மஞ்சப் பையே! எங்கே போனாய்?
கதற கதற உனை பயன் படுத்தி கசாப்பு கடைக்கும் உன்னை சுமந்து சென்றார்களே!
எம் முன்னோர்கள்!அது மட்டுமா! கடைசியில் உன்னை பார்த்தது அடுப்படி கரித் துணிக்கல்லவா!
இத்துணை சிறப்பு பெற்ற மஞ்சப் பையே! நீ திரும்பி வா!
போதும் உன் கோபம்!
மக்கள்
நெகிழிக் காகிதம் மீது நேசம் கொண்டு அகழியில் கிடக்கும்
முதலைகளாய் அல்லல் பட்டதும் போதும்!
நீ வலம் வரும் காலத்தில் ஓசோன் வழி மண்டலத்தில் ஓட்டை இல்லை!
எல்லாம் எங்கள் சதி! சோம்பேறிதனத்தில் நெகிழிக் காகிதத்துடன் நேசம் வைத்து குப்பை மேடாய் குவியலை வைத்து தீயை மூட்டியது!
அட!அட!அழகு தமிழில் கேரி பேக் என்று நெகிழியைச் சொன்னதால் யாருக்கும் புரியவில்லையாம்!
நீ இருந்த காலத்தில் வசந்தம் வீசியது!
இன்று மார்கழி மாதம் கூட சிறிது வெக்கையாய் இருக்கிறது!
எல்லாம் எங்கள் வெட்கம் கெட்ட செயலால்!
எங்களை மன்னித்து நீ திரும்பி வந்தால் போதும்!
நாங்கள் திருந்தி விட்டோம்!
அதோ ஜவுளிக்கடை முன்
அறிவிப்பு பலகை வாசகம்!
ஆயிரம் ருபாய்க்குஜவுளி வாங்கினால் ஐந்தாறு மஞ்சள் பை இலவசம் என்று!
இலவசம் எங்கள் ஆழ் மனதில் பதிந்து விட்ட வாசகம்!
இரு நானும் ஓடிப் போய் வாங்கி வந்து விடுகிறேன்!
மஞ்சள் பையே!
இனி 2019 ல் இருந்து உன் ராஜியமே!
மகிழ்வோடு வரவேற்கிறோம்!
உன்னால் வசந்தங்கள் வீசட்டும்!
எம் தமிழ் மண்ணில்! வாழ்த்தும்! டாக்டர் கோவை கிருஷ்ணா.
***குறிப்பு: இதை படித்தவுடன் மனம் இருந்தால் மற்றவர்களுக்கு அனுப்புக.

COMMENTS