இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால், தன் நிறுவனத்தின் பொறுப்பை

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின்  முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால், தன் நிறுவனத்தின் பொறுப்பை, தன்னிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளையிட்டார். "உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ, அவர் தான் அடுத்த மேலாளர்.. என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன. இதை ஆளுக்கொன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரமிட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யாருடைய செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும்.." என்றார். அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர், அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமு உட்பட. தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டி, உரம், தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழிந்தது. நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து ...