இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிகப்பு கொய்யாவில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள

கொய்யாப்பழம்  நம்மூர்களில் மிகவும் சர்வ சாதரணமாக கிடைத்திடும் ஓர் பழமாக இருக்கிறது. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குண நலன்கள் மாறுபடும் ஏனென்றால் பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துக்கள்,ஃபைட்டோ கெமிக்கல்களினால் தான் பழத்தின் நிறம் வேறுபடுகிறது. கொய்யாவில் மிகவும் சுவையுடையது என்றால் சிகப்பு கொய்யாவைச் சொல்லலாம். குறைவான கலோரி,அதிக நார்ச்சத்து கொண்டது இந்த கொய்யாப்பழம். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொய்யாப்பழம் கிடைக்கிறது. இந்த சிகப்பு கொய்யாவில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள். கரோடினாய்டு என்பது ஒரு வகை ஆண்ட்டி ஆக்ஸிடண்ட். இது பழங்கள் மற்றும் காய்கறிகளில் தான் அதிகமிருக்கும். ஆரஞ்சுப்பழம்,கொய்யாப்பழம் , கேரட்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் இந்த கரோடினாய்டு அதிகமிருக்கிறது. இதைத் தான் நாம் விட்டமின் ஏ என்றும் சொல்கிறோம். ஆரோக்கியமான சருமத்திற்கும் கண்பார்வைக்கும் விட்டமின் ஏ மிகவும் அவசியமான ஒன்றாகும் பலவிதமான பழங்களில் விட்டமின் சி இருக்கிறது அவற்றை விட கொய்யாப்பழம் ஒரு படி மேலேயே சென்றிருக்கிறத...

எலுமிச்சை பழத்தில் தோல் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியை போக்க உதவுகிறது.

மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையை கொண்ட எலுமிச்சை பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது. அதுவும் அதன் தோல் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியை போக்க உதவுகிறது. அதற்கு எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும்?  10 எலுமிச்சை பழங்களை எடுத்து நீரில் கழுவி, அதன் தோலை சீவி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதனுடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து 15 நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன் பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலி உள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊறவைத்து காலையில் எடுத்தால் வலி மறையும். மற்றொரு வழி எலுமிச்சை பழங்களின் தோலை சீவி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைத்தால் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.