எலுமிச்சை பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது.
மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையை கொண்ட எலுமிச்சை பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது.
அதுவும் அதன் தோல் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியை போக்க உதவுகிறது. அதற்கு எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்த வேண்டும்?
10 எலுமிச்சை பழங்களை எடுத்து நீரில் கழுவி, அதன் தோலை சீவி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதனுடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து 15 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
அதன் பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலி உள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊறவைத்து காலையில் எடுத்தால் வலி மறையும்.
மற்றொரு வழி
எலுமிச்சை பழங்களின் தோலை சீவி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைத்தால் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.
COMMENTS