Appointment of Young Professionals for District Monitoring Unit in Tiruppur District Statistics Office on Outsourcing Basis
மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தகவல்!!! திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் முக்கிய திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்க, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில் (District Monitoring Unit) இளம் வல்லுநர் (Young Professional)-ஆக பணியாற்ற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசின் முக்கிய திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்க திருப்பூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்த ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு, புறச்சேவை நிறுவனம் (Outsourcing Agency) மூலம் நியமிக்கப்பட உள்ளார். மேற்கண்ட பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளிஇயல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (4 ஆண்டு பட...