மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் த...
மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தகவல்!!!
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் முக்கிய திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்க, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில் (District Monitoring Unit) இளம் வல்லுநர் (Young Professional)-ஆக பணியாற்ற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசின் முக்கிய திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்க திருப்பூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்த ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு, புறச்சேவை நிறுவனம் (Outsourcing Agency) மூலம் நியமிக்கப்பட உள்ளார்.
மேற்கண்ட பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளிஇயல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (4 ஆண்டு படிப்பு மட்டும்) அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளிஇயல் மற்றும் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
(Excel, SPSS, R & Microsoft Office Tools) தேர்ச்சி, விரிவான ஆராய்ச்சி மற்றும் பல்வேறு துறைகள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் தரவுகளில் பகுப்பாய்வுத் திறன், ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிக்கைகள், விளக்கக்காட்சிகள் மற்றும் கொள்கை விளக்கங்களை உருவாக்கும் திறன் ஆகியவை அவசியமான தகுதிகளாகும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.50,000/- வழங்கப்படும். இப்பணிக்கான விண்ணப்பத்தினை "புள்ளிஇயல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், அறை எண். 423, 4வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் 641 604" என்ற முகவரிக்கு அல்லது adstpr1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.01.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருப்பூர் மாவட்டம்.
COMMENTS