இனி_உன்_வாழ்வில்_நல்லதே_நடக்கும்
#இனி_உன்_வாழ்வில்_நல்லதே_நடக்கும்
லட்சியத்தை நோக்கி அசைக்கமுடியாத
உறுதியுடனும், பொறுமையுடனும் செயல்பட்டால் தான் நீ வெற்றி பெறுவாய்.
நீ பிறருக்கு செய்யும் தன்னலமற்ற நன்மை என்ற ஒன்றினால் உன்னுடைய கர்மாக்களை நீ கரைந்துபோக செய்ய முடியும்.
நீ ஒரு அடி எடுத்து வைத்தால் உன் அம்மா அப்பாவாகிய இந்த சாய்பாபா உனக்காக நான் 100 அடி வைப்பேன்.
இதை நீ நடைமுறைப்படுத்திப் பார் நிச்சயமாக உன் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்து விடும்.
நான் உனக்கு அடிக்கடி கூறுவது நீ செய்யும் எந்த ஒரு காரியத்திற்க்கும் பலனை எதிர்பார்த்து செய்யாதே.
பிறகு, அவர்களுக்கு நான் என்னவெல்லாம் செய்தேன் ஆனால் அவர்களோ எனக்கு தீங்கு இழைத்து விட்டார்கள் என்று புலம்பாதே..!
அவரவர் செய்யும் செயல்களுக்கான பலனை அவரவர்கள் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.
விவேகத்தை கடைபிடி
விவேகத்தை கடைபிடி, தெய்வ பக்தியுடன் நீதிக்கு கட்டுப்பட்டு வாழ், இதனால் நீ என்றும் தாழ்ந்து போகமாட்டாய்.
தீமையை சகித்துக்கொள், இவைகளால் உன் பாவ கணக்குகள் ஒவ்வொன்றாக கழிக்கப்பட்டு
முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்பதை புரிந்து கொள்.
நீ வாழ்வில் துன்ப நிலை மாறி இன்ப நிலை அடையப்போகிறாய்.
உன் நிலையை மாற்றி அமைப்பேன். உன் கரத்தை பல படுத்துவேன்,
நம்பிக்கையுடன் காத்திரு...இது நிச்சயம் நிறைவேறும்.
நல்லதே நடக்கும்..!
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !
இப்படிக்கு
#உனக்கு_ஜெயம்_தரும்_சாய்பாபா
#ஓம்_சாய்ராம்...
COMMENTS