மகாலட்சுமியின் அவதாரம் - அக்கினியில் அவதரித்தாள்

மகாலட்சுமியின் அவதாரம் - அக்கினியில் அவதரித்தாள் மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அவதார கதையை அறிந்து கொள்ளலாம். மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- முன்காலத்தில் பத்மாட்சன் என்ற மன்னன் நீதிநெறி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். செல்வத்தின் தேவதையாகிய லட்சுமியை தன் பெண்ணாக அடைய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டானது. அப்போதே காட்டுக்குள் சென்று லட்சுமிதேவியை நினைத்து குறித்துக் கடும் தவம் செய்தான். லட்சுமிதேவி லட்சுமிதேவி பத்மாட்சன் முன் தோன்றி, 'நீ வேண்டும் வரம் யாது?' என்று கேட்டாள். பத்மாட்சன் மகாலட் சுமியை போற்றி துதித்து, 'தாயே! இந்த உலகில் எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை. எனக்குள்ள ஒரே மனக்குறை ஒரு குழந்தை இல்லையே என்பது தான். தாயே! தாங்களே எனக்கு மகளாக வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்குள்ள விருப்பம். அதற்கு அருள்பாலிக்கவேண்டும்' என்று கேட்டுக் கொண்டான். புன்னகை புரிந்த மகாலட்சுமி 'பத்மாட்சனே...