அதிகமான அன்பு வேண்டாம் மிகுதியான புரிதல் போதும் அக்கறை கூட வேண்டாம் புறக்கணிப்பை புறந்தள்ளினால் போதும். உனக்கு என்ன பிடிக்கும் என்ப...
அதிகமான அன்பு வேண்டாம்
மிகுதியான புரிதல் போதும்
அக்கறை கூட வேண்டாம்
புறக்கணிப்பை புறந்தள்ளினால் போதும்.
உனக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட
என்னவெல்லாம் பிடிக்காது சொல்
கோபப்படு..
உரிமையை கொடுத்து..
உரிமையை எடுத்துக்கொள்
சண்டை நமக்குள் வரட்டும்
சமாதானப்படுத்த எவரும் தேவையில்லை
உன் உடலில் உள்ள அடையாளங்கள்
எனக்கு முக்கியமல்ல
உள்ளத்தில் உள்ளதை கண்களில் காட்டு.. படித்துக்கொள்கிறேன்
நமக்குள் நிர்வாணம் வேண்டாம்
நீ எனக்கு ஆடையாக..இரு
நான் உனக்கு கவசமாகவே இருக்கிறேன்
உணர்ச்சிகளை வெளிப்படுத்து
உன் உணர்வுகளை பாதுகாக்கிறேன்
நமக்குள் வரைமுறை தேவையில்லை
நம்பினால் போதும்.
ஒருவருக்கொருவர் ஆராய்ச்சி தேவையில்லை
அவகாசம் கொடுத்தால் போதும்
எப்போதும் கண்களை பார்த்து பேசுவோம்
அதற்காக கைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை
நமக்கு எதிரிகள் தேவை
நானா நீயா..என்ற அகங்காரத்தை..
அலங்காரம் என்று சொல்லாதவர்களாக இருக்கட்டும்
நமக்கு நண்பர்கள் வேண்டும்
அவர்கள் முரண்பட்ட கருத்துடையோராக இருந்தாலும் பரவாயில்லை..
எதிர்மறை கருத்துடையோர் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்
நாளை..
நிச்சயமில்லை
பிரச்சனையோ..பிரியமோ..
தூங்கும்போது புறமுதுகு கூடவே கூடாது
வா வாழ்ந்து காட்டலாம்
**************************
மிகுதியான புரிதல் போதும்
அக்கறை கூட வேண்டாம்
புறக்கணிப்பை புறந்தள்ளினால் போதும்.
உனக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட
என்னவெல்லாம் பிடிக்காது சொல்
கோபப்படு..
உரிமையை கொடுத்து..
உரிமையை எடுத்துக்கொள்
சண்டை நமக்குள் வரட்டும்
சமாதானப்படுத்த எவரும் தேவையில்லை
உன் உடலில் உள்ள அடையாளங்கள்
எனக்கு முக்கியமல்ல
உள்ளத்தில் உள்ளதை கண்களில் காட்டு.. படித்துக்கொள்கிறேன்
நமக்குள் நிர்வாணம் வேண்டாம்
நீ எனக்கு ஆடையாக..இரு
நான் உனக்கு கவசமாகவே இருக்கிறேன்
உணர்ச்சிகளை வெளிப்படுத்து
உன் உணர்வுகளை பாதுகாக்கிறேன்
நமக்குள் வரைமுறை தேவையில்லை
நம்பினால் போதும்.
ஒருவருக்கொருவர் ஆராய்ச்சி தேவையில்லை
அவகாசம் கொடுத்தால் போதும்
எப்போதும் கண்களை பார்த்து பேசுவோம்
அதற்காக கைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை
நமக்கு எதிரிகள் தேவை
நானா நீயா..என்ற அகங்காரத்தை..
அலங்காரம் என்று சொல்லாதவர்களாக இருக்கட்டும்
நமக்கு நண்பர்கள் வேண்டும்
அவர்கள் முரண்பட்ட கருத்துடையோராக இருந்தாலும் பரவாயில்லை..
எதிர்மறை கருத்துடையோர் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்
நாளை..
நிச்சயமில்லை
பிரச்சனையோ..பிரியமோ..
தூங்கும்போது புறமுதுகு கூடவே கூடாது
வா வாழ்ந்து காட்டலாம்
**************************
COMMENTS