The thing that an Ayyappa devotee should do is Tamil Sabarimalai help contact number Devasthanam board number Pamba police station number
ஐயப்ப பக்தர் செய்ய வேண்டிய விஷயம்
------------------------------------------------- ------ *பந்தள தேச மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன், இவன் தனது 12 வயதிலேயே வேத சாஸ்திரங்கள், புராணங்கள், வில், வாள் வித்தை, கம்பு, சிலம்பம், களரி போன்ற அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்த மாவீரனாய் திகழ்ந்தான்.
இtவன் வாள், வில் வித்தை மற்றும் களரியில் வல்லவன்.*
*தனது அவதார நோக்கமான மகிசமூகி என்ற அரக்கியை வதம் செய்த பிறகு, தான் நைஸ்த்டீக பிரம்மச்சாரியாக(உச்சகட்ட பிரம்மச்சரியம்) தவம் செய்ய சென்ற இடம் தான் சபரிமலை.*
*சபரிமலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்த்ரீக் கோவில். இங்கு பூஜை செய்பவரை தாந்த்ரீகள் என அழைப்பர்.
இவர்கள் அதிகம் முத்திரைகளை பயன்படுத்துபவர். அதாவது அதிகம் அறிவியலை பின்பற்றும் ஒரு கோவில்.*
*மற்ற கோவில்கள் போல் இது வருடம் முழுவதும் இயங்காது.
கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை தான் நடை திறக்கப்படும். இந்த நாட்களிலும் அனைவரும் சாதாரணமாக சென்று விட முடியாது.*
*ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி தான் செல்ல வேண்டும்.
இதற்கு துளசி மணி மாலை, தாமரை மாலை மற்றும் ருத்ராட்ச மாலை பயன்படுத்துபவர்.*
*48 நாள் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதமுறைகளை பார்ப்போம் !*
------------------------- ---------------------------------------- தினமும் காலையில செய்யவேண்டியது
*1 - தினம் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மாலையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
குளித்த பின் ஐயனின் வழிபாட்டை மேற்கொண்ட பின் உணவு உட்கொள்ள வேண்டும்.*
*2 - மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும், எப்பொழுதும் ஐயனையே நினைத்து சரணங்களை சொல்லி வர வேண்டும். இழி சொற்களை உதிர்க்கக்கூடாது.*
*3 - பாய், தலையணை, மெத்தைகளை பயன்படுத்தக் கூடாது. தரையில் தூய்மையான ஒரு பருத்தி துணி விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும்.*
*4 - அசைவம் உண்ணக்கூடாது, மது புகை போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது, முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ, தன்னை அலங்காரம் செய்யவோ கூடாது.*
*5 - இது ஒரு மிக முக்கியமான கட்டுப்பாடு. , பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் முடிக்காதோரும் சரி திருமணம் முடித்தோரும் சரி தனது சுக்கிலத்தை வெளிப்படுத்தக்கூடாது.*
*6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்காமல் இருக்க வேண்டும், அருகில் செல்லக்கூடாது. தொட்டுப் பேசக்கூடாது.*
*7 - பிறர் வீட்டில் உண்ணவோ உறங்கவோ கூடாது. கடைகளில் உண்ணக்கூடாது. அதிக காரம் மசாலா கலந்த உணவுகளை உண்ணக்கூடாது. உப்பு, புளி, காரம் மிதமாகவே பயன்படுத்த வேண்டும்.
பசித்தால் பழங்கள் காய்கனிகள் கொட்டை பருப்புகள் போன்ற இயற்கை உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும்.*
*8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.*
*9 - ஒரு வேலை மணி மாலை அறுந்தால் அதை சரி செய்து மீண்டும் அணியலாம். அதில் எந்த தவறும் இல்லை.*
*10 - காலணிகளை அணியக்கூடாது.*
*ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவை.*
*நான்கு வருடம் பல்லாயிரம் பேருக்கு வைத்தியம் பார்த்து வைத்தியம் என்ற முறையில் இதன் நன்மைகளை நான் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.*
---- ------------------------------------------------- ----------------
*48 நாள் விரதத்தின் நன்மைகள் !*
*1 - ஆண்களுக்கு வரும் Azoospermia (விந்தணு பூஜ்ஜியம் ஆகும் நிலை), விந்தணு நீர்த்துப்போதல் போன்ற மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு அதிக உடற்சூடு முக்கிய காரணம்.
இப்பொழுது பலர் இதற்கு இலட்சமாக இலட்சமாய் செலவழித்து வைத்தியம் பார்ப்பதை நீங்களே அறிவீர்கள்.
உடல் சூட்டைக்கூட விந்தணுவால் தாங்க முடியாது என்பதனாலே இறைவன் சற்று உடலை விட்டு தள்ளி விதைப்பையை படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா ! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடலில் தேங்கிய அதிகப்படியான உஷ்ணம் குறைகிறது.
அதுமட்டும் அல்லாமல் பிரபஞ்ச சக்தி அந்நேரத்தில் அவனுக்கு அபரிதமாக கிடைக்கிறது. அவன் உடல் எலும்புகள் வரை ஊடுருவி அதிக வெப்பம் இந்த குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது படிப்படியாக குறைந்து விந்தணு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளி வர பேருதவி புரிகிறது.*
*2 - மனதை அமைதியாக வைத்துக்கொண்டு இறை சிந்தனையில் இருக்கும் போது அவனது உடலில் உள்ள அனைத்து ராஜ உறுப்பு சக்திகளுக்கும் கிடைக்கிறது. மனதை சரியாக வைத்துக்கொள்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வந்து அவன் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிறது.
மேலும் தீஞ்சோற்களை பேசாமல் இருப்பது மூலம் அவனை சுற்றி நேர்மறை சக்திகள் அதிகரிக்கின்றன.*
*3 - தரையில் பருத்தி துணி விரித்து தலையனை வைக்காமல் படுப்பதன் மூலம் இரத்த ஓட்டங்கள் சீர் பெறுகின்றன. உடற்சூடு அதிகம் ஆகாமல் இருக்கும்.
பூமிக்கும் உடலுக்கும் உள்ள மின்காந்த சக்திகள் சமநிலைபெறும்.*
*4 - அசைவம் உண்ணாமல் போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருக்கும் போது அவனது உடலில் உள்ள கல்லீரல் பலம் பெருகிறது. இதனால் அவனது Body metabolism சீர்பெறுவதுடன், கோபம் குறைந்து எடுத்த செயல் யாவினும் தெளிவானதொரு முடிவு எடுக்க முடிகிறது.
48 நாள் போதை பொருட்களை பயன்படுத்தாமல் விட்டால் எளிதில் அவன் போதை பழக்கம் போன்ற அனைத்து தீய பழக்கங்களிலும் இருந்து வெளி வர முடியும்.
இதற்காக ஐயப்பனுக்கு மாலை போட பரிந்துரை செய்யும் மருத்துவர்களும் உண்டு.*
*5 - பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்கும் போது, அதாவது இல்லறத்தில் ஈடுபடாமல் இருக்கும் போது, சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கும் போது, காம எண்ணத்தினுள் நுழையாமல் இறை சிந்தனையுடன் மட்டுமே இருக்கும் போது உச்சி முதல் பாதம் வரை உள்ள அவனது அனைத்து அவயங்களில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்பட்டு நல் சிந்தனை, ஆரோக்கியமுடைய புது மனிதனாய் உரு மாறுகிறான்.
இதனால் Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகளும் குணமாகி குழந்தையின்மை என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லாமல் போகும்.
வருடத்தில் ஒரு மண்டலம் தன்னை சீர்படுத்திக்கொள்வதால் வருடம் முழுவதும் அவனால் இல்லறத்தில் ஆரோக்கியமாக ஈடுபட முடியும். இல்லறம் நல்லறமாக இருக்கும் போது எப்பொழுதும் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமே நிலவும்.
அனைத்திற்கும் மேலாக பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பவனுக்கு பிறக்கும் குழந்தைகளின் திறமைகளை தனது மரபணுவில் கொண்டு தெளிந்த அறிவுடைய தெய்வீக அம்சம் பொருந்திய குழந்தை பிறக்கிறது.*
*6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்க கூடாது, நெருங்க கூடாது, தொட்டு பேசக்கூடாது.
மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் காந்தம் போன்றவர்கள் இவர்களால் பிறர் சக்தியை எளிதாக ஈர்த்துக்கொள்ள முடியும். எனவே ஒரு ஆண் அருகில் வந்தாலோ தொட்டாலோ இவனது சக்திகள் குறைந்துவிடும் என்பதால் இதை சொன்னார்கள்.*
*7 - பிறர் வீட்டில் உண்ணாமல் உறங்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு நல்ல உணவே கிடைக்கும், நல்ல சக்திகள் அவரது வீட்டினுள்ளேயே தங்கும்.
மசாலா உணவை தவிர்ப்பதன் மூலம் காம இச்சைகள் கட்டுப்படும்.*
*8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் போது, இவன் வளர்த்து வந்த பிராண சக்தி விரையம் ஆகாமல் இருக்கும்.*
*9 - துளசி மணி மாலைகள், தாமரை மாலைகள், ருத்ராட்சங்கள் ஆகியவை காம உணர்வைக் கட்டுப்படுத்தும்.*
*10 - 48 நாள் காலணிகளை பயன்படுத்தாமல் இருக்கும் போது. இவனது பாதம் பூமிப்பந்தின் மீது நேரடியாக படும்.
இதன் மூலம் பூமிக்கும் இவனுக்கும் உள்ள மின்காந்த ஓட்டம் சீர்பெறும், நிலம் பஞ்சபூத சக்தி இவனது உடலில் அதிகரிக்கும் வயிறு, மண்ணீரல் சீராக இயங்கத்துவங்கும்.
மேலும் வெறும் காலில் நடப்பது முழுவதும் பாதத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு உச்சி வரை இரத்த ஓட்டமும் சக்தி ஓட்டமும் சீர் பெற்று ஒரு முழுமையான ஆரோக்கியம் நிறைந்த மனிதனாக இவனால் வாழ முடியும்.*
*48 நாள் இந்த கடும் விரத முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சீர் பெற்று, அவனின் ஆண் தன்மை அதிகரிக்கும். Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகள் சரியாகிறது.
அது மட்டுமா இவனால் அறிவில் சிறந்த மரபு திறமைகளை ஜீன் வழியே பெற்ற வீரம் செறிந்த அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.*
*இப்படி ஐயப்ப வழிபாடு முழுக்க முழுக்க ஆண்களுக்காக மட்டுமே உள்ளது. அவனது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே உள்ளது.*
*தரமான விதை இருந்தால் தானே செழிப்பான விருட்சம் வளரும் !*
*இப்படி ஆரோக்கிய வித்து இருந்தால் தானே ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக முடியும்.*
*லட்சக்கணக்கான ஆண்கள் மட்டும் ஒரே இடத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கும்.
Testerone Harmone குறைபாடு உள்ளவர்களுக்கு இது அதிகரித்து வரும் பிரச்சனைகள் தீரும்.
ஆண்களின் ஆன்ம பலம் அதிகரிக்கும்.*
*ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்க்கத் துவங்கிய பின் தான் பந்தள மன்னர் இராசசேகரனுக்கே குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.*
*சரி பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை என்று பார்ப்போம் !*
---------------- -------------------------------------------------
*ஆயிரம் ஆண்டுகளாகவே இங்கு பெண்களை அனுமதிப்பதில்லை.*
*200 ஆண்டுகளுக்கு முன்பே 1816ல் பென்ஜமீன் ஸ்பயன் பர்டு, பீட்டர் அயர் கார்னர் என்ற இரு ஆங்கிலேய ஆய்வாளர்கள் திருவிளாங்கூர் கொச்சி மாகாணங்களின் கலாசார ஆய்வுகளில் ஈடுபட்டு மக்களின் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை பற்றிய பதிவுகள் THE SURVEY OF THE TRAVANCHCORE AND RESTAT இல் பதிவு செய்யப்பட்டன.
அதில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
பூப்பெய்தலுக்கு முன் பேரிளம் பெண்ணிற்கு பின் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று பதிவு செய்துள்ளார்கள்.
கேரள அரசு இதை அங்கீகரித்து முக்கிய சாசனமாக ஏற்றுக்கொண்டுள்ளது.*
*அதாவது 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. மற்ற பெண்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை.
பூப்பெய்தல் முன் பருவமும் பேரிளம் பெண்ணிற்கு பின் பருவமும் அனுமதிக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் கருமுட்டை மாதவிடாய் முடிந்து வெளி வரத்துவங்கிய நாட்களில் அது நின்று போகும் காலம் வரை அனுமதி இல்லை. இது அவர்களின் வளமான காலம்.*
*சரி இப்பொது மாதவிடாய் என்றால் என்ன என்று பார்ப்போம்.
பெண்களுக்கு இரண்டு கருமுட்டை பை உள்ளது.
இதில் ஒவ்வோறு மாதமும் வலது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை இடது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை வெளியேறும்.*
*இப்போது கருமுட்டை கருமுட்டையில் 14 நாட்கள் வளர்கிறது.
*இப்போது கருமுட்டை கருமுட்டையில் 14 நாட்கள் வளர்கிறது.
வளர்ந்த கருமுட்டை ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பை 7 நாட்களில் அடைகிறது.*
*இந்த கருமுட்டையை வரவேற்க தனது உடலில் உள்ள சத்துக்களை எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து கருப்பை வரவேற்கிறது.
இந்த காலத்தில் ஒரு ஆண் விந்தணுவுடன் சேரவில்லை எனில், அந்த சிவப்பு கம்பளத்துடன் அந்த கருமுட்டை 7 நாட்களில் வெளியேறும்.*
*ஆக மொத்தம் 14 + 7+ 7 = 28 நாட்கள். ஆகவே தான் 28 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் மாதவிடாய் காலமாக உள்ளது.*
*பெண்களை நிலவுடன் ஒப்பிடுவார்கள். நிலவும் மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே தெரியும். நிலவின் ஒளி கருப்பையை வலுவடையச்செய்யும்.*
*மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என பெண்களுக்கு சில வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளார்கள்.*
*1 - இந்த காலத்தில் பெண்கள் காந்தம் போன்றவர்களாய் மாறுவார்கள். இவர்களின் பிராண கழிவுகளை வெளி தள்ள மூலாதாரத்தை நோக்கியே செயல்படும்.
அந்த மூன்று நாள் இவர்கள் பெறும் ஆண்டெனாவாக மாறுவார்கள். தன்னை சுற்றி உள்ள நல்லவர்களாக இருந்தாலும், கெட்ட சக்திகளாக இருந்தாலும் எளிதாக ஈர்த்துக்கொள்வார்கள்.
எனவே தான் மூன்று நாள் ஓய்வில் ஒரு இடத்தில் இருக்கச்சொன்னார்கள். மாலை நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது என சொன்னார்கள். இந்த காலத்தில் வரும் இரத்த வாடை கெட்ட சக்திகளை ஈர்க்கும் வல்லமை பெற்றது.
எனவே தான் வெளியில் சென்றால் கரிகட்டையும் இரும்புத்துண்டும் கொடுத்து அனுப்புகிறோம். இந்த கரித்துண்டும் இரும்பும் கெட்ட சக்திகளை ஈர்த்துக்கொண்டு அவர்களை காப்பாற்றும். இரத்த வாடை மிருகங்களையும் ஈர்க்கும்.*
*இப்படி இவர்களது உடல் அனைத்து சக்திகளையும் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும் போது கோவிலுக்கு வந்தால் அங்குள்ள விக்கிரக சக்திகளுக்கு சிதைவு நிலை ஏற்பட்டு பிறருக்கு எந்த பலனும் இல்லாமல் போகும் என்பதனாலேயே கோவிலுக்கு செல்லக்கூடாது என கூறினார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் சக்தியும்(எனர்ஜி லெவல்) காணாமல் போகும்.
யாரேனும் இந்த காலத்தில் இவர்களை தொட்டாலோ அருகில் வந்தாலோ அவர்களின் உடலில் சக்திகள் குறைந்து ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்பதனாலே தான் யாரையும் தொடக்கூடாது என சொன்னார்கள்.*
*2 - குளிக்க கூடாது. குளித்தால் வெப்பம் குறைந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. பின் அது உள் தங்கி கட்டிகளாக மாறிவிடும்.*
*3 - சணல் சாக்கில் உறங்க வேண்டும். இது வெப்பத்தை பாதுகாத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவும்.*
*4 - தனியாக பொருட்களை பயன்படுத்தியதும், சக்தி நிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.*
*5 - எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போது இயக்க சக்திகள் அவர்களது கருப்பைக்கு சக்தியை கொடுத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்றும்.
ஓய்வில் இல்லாமல் வேறு வேலைகளில் இருந்தால் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் pcod pcos போன்ற பல்வேறு நீர்கட்டிகளாக மாறும். இதை கழிவுகள் என்று சொல்ல முடியாது.
அந்த கருமுட்டையை வளர்த்த உடல் சேகரித்து வைத்த ஊட்டப்பொருட்கள் எனலாம்.*
*இன்னும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அறிவியல் காரணங்கள் உண்டு.
இது அனைத்தும் அவர்களது நன்மைக்காகவே என்பதை நமக்கு மறைத்துவிட்டார்கள்.*
சபரிமலை – சமீபத்திய முக்கிய செய்திகள் (மார்ச் 2025)
1. கோயில் வருவாய் ₹200 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்த ஆண்டு கோயில் வருவாய் ₹200 கோடியை கடந்துள்ளது. இது வெறும் ஐந்து வாரங்களிலேயே கிடைத்த வருவாயாகும். இந்த வருவாய் அர்ச்சனை, காணிக்கை, பிரசாதம் மற்றும் அன்னதானம் மூலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. நடிகர் மோகன்லால் சபரிமலைக்கு வந்துள்ளார்
மலையாள திரையுலகத்தின் முன்னணி நடிகர் மோகன்லால், மார்ச் 18 அன்று சபரிமலைக்கு வந்து ஸ்வாமியையே சரணம் அய்யப்பா என்று மலையேறி தரிசனம் செய்துள்ளார். அவர் விரைவில் வெளிவரவுள்ள தனது புதிய திரைப்படம் ‘L2: Empuraan’ முன்னிலையில் கோயிலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
3. தரிசன நேர மாற்றம் – பக்தர்கள் கவனிக்க வேண்டும்
சபரிமலை கோயிலின் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், யாத்திரைக்கு வரும் பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (sabarimalauptodate.in) அல்லது தேவசம் போர்டு அறிவிப்புகளை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4. சபரிமலைக்கு புதிய ரயில்வே திட்டம் – மெதுவாக செயல்படுத்தப்படுகிறது
சபரிமலை பக்தர்களுக்காக அங்கமாலி-சபரிமலை ரயில்வே திட்டம் பல வருடங்களாக திட்டமிடப்பட்டு இருந்தாலும், இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது இந்த திட்டம் ₹3,801 கோடி செலவில் புதுப்பித்து செயல்படுத்தப் படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ரயில்வே பாதையை விழிஞ்சம் துறைமுகம் வரை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.
5. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
சமீபத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் பெருந்தொகையில் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் மற்றும் தேவசம் போர்டு நிர்வாகிகள் கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் நடைபெற இருக்கும் பங்குனி உத்ரம் விழாவை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சபரிமலை விரதத்தின் சிறப்பு மற்றும் புனிதம்
சபரிமலை விரதம் என்பது ஆன்மிக தியானத்திற்கும், தீவிர பக்திக்கும் ஒரு சிறந்த வழியாகும். பழங்காலத்தில், இது மிகவும் கடினமானதாக இருந்தது. என் தாத்தா, தனது மனைவியையே பார்க்காமலே, ஒரே வீட்டில் இருந்தபோதும் திரை போட்டு, நாற்பது நாட்களுக்கு மேல் அவரின் முகத்தைப் பார்க்காமலே விரதம் மேற்கொண்டார். அப்போது போக்குவரத்து வசதிகள் இல்லாத அடர்ந்த காட்டு பகுதிகளில் புலி, யானை போன்றவற்றின் அச்சமின்றி, உயிரையே பணயம் வைத்து மலைக்கு சென்று, குடும்பத்தினரிடம் திரும்பி வருவதே உறுதி செய்ய முடியாத விஷயமாக இருந்தது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலையை ஒரு புனிதத் தலமாகக் கருதுகிறார்கள். இன்று வரை, சபரிமலை ஐதிகம் பின்பற்றப்படுகிறது. "திரும்பிப் பார்க்காமல் போய் வருகிறேன்" என்று கூட சொல்லாமல், ஐய்யன் தரிசனமே குறிக்கோளாக நினைத்து, பக்தர்கள் விரதம் கடைப்பிடிக்கின்றனர்.
ஐய்யப்பன் பக்தியில் மதசார்பின்மை
ஐய்யப்ப பக்தியில் மத பேதம் இல்லை. உலகில் எந்த மதத்தினரும் ஐய்யப்பனை வணங்கலாம். இதற்குக் காரணம், இஸ்லாமிய மசுதியில் கூட விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது. ஐய்யப்பனின் நண்பனாக இருந்த வாபர் மசுதியில் இது நடைபெறுகிறது. அதுபோல், கிறித்தவரான ஜேசுதாஸ் பாடிய ஹரிஹராசன பாடல், இன்று வரை ஐய்யப்பனின் தாலாட்டு பாடலாக ஒலிக்கிறது.
சபரிமலை மற்றும் நமது முன்னோர்களின் அறிவியல் பார்வை
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, செயற்கைக்கோள் (ஸேட்லைட்) இல்லாத காலத்திலேயே, சனிகிரகம் கருப்பு நிறம் கொண்டது என்று கண்டறிந்தவர்கள் நம் முன்னோர்கள். இதன் மூலம், அவர்கள் அறிவியல் பார்வை கொண்டவர்களாக இருந்ததை அறியலாம். இதே போலவே, சபரிமலையில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமில்லாமல் இருக்காது.
ஐய்யப்பன் பக்தியின் மகிமை
இன்றும், உண்மையாக விரதம் இருந்து, ஆண்டுதோறும் ஐய்யனின் தரிசனம் பெறும் பக்தர்கள், தங்கள் வாழ்நாளில் ஒருகணமேனும் அவரை உணர்ந்திருப்பார்கள். கலியுக வரதன் என்ற சிறப்பு, ஐய்யப்பனுக்கே சரியாக பொருந்தும். எனவே, ஐய்யனின் அருள் பெற, சபரிமலை புனிதத்தைக் காப்போம்.
ஸ்வாமியே சரணம், ஐய்யப்பா!
📌 பக்தர்கள் கவனிக்க வேண்டியவை:
✅ தரிசன நேரம் மாறியுள்ளதால் அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்கவும்.
✅ கூட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும்.
✅ முன்பதிவு மற்றும் இணையதளங்களை சரிபார்த்தபின் யாத்திரைக்கு திட்டமிடவும்.
📍மேலும் தகவலுக்கு:
➤ அதிகாரப்பூர்வ இணையதளம்: www.sabarimalaupdate.in
➤ கேரளா தேவசம் போர்டு: www.keralatemples.com
இவ்வாறு, சபரிமலைக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். ஸ்வாமியையே சரணம் அய்யப்பா!
Sabarimala Contact Information
Hospital Telephone Numbers (STD CODE: 04735)
Hospital | Sabarimala | Pamba |
---|---|---|
Cardiology Centre (Appachimedu) | 202050 | - |
Cardiology Centre (Neelimala) | 203384 | - |
Government Hospital | 202101 | 203318 |
Govt. Homoeo Hospital | 202843 | 203537 |
Govt. Ayurveda Hospital | 202102 | 202536 |
SAHAS Hospital | 202080 | 203350 |
NSS Hospital | 202010 | - |
Nilackal Govt. Hospital Helpline (Ambulance) | 1298 | 1298 |
Transport Telephone Numbers (STD CODE: 04735)
Service | Pamba | Other Locations |
---|---|---|
Railway Enquiry Counter | 203605 | - |
Railway - Kottayam | - | 0481-2563535 |
Railway - Chengannur | - | 0479-2452340 |
KSRTC | 203445 | - |
Emergency Telephone Numbers (STD CODE: 04735)
Service | Sabarimala | Pamba |
---|---|---|
Police Station | 202014 | 203412 |
Police Control Room | 202016 | 203386 |
Police Special Officer | 202029 | 203523 |
Fire Force | 202033 | 202333 |
Safe Zone Helpline | 09400044991 | 09656501818 |
Helpline & Enquiry
Sabarimala Enquiry: +91 7025800100
Email: sabarimala.pol@kerala.gov.in
Women Cell Pathanamthitta: 0468 2325352 | showmncelpta.pol@kerala.gov.in
Sabarimala Information (PRO): 04735 202048
Accommodation Enquiry: 04735 202049
Information (Pamba): 04735 203339
COMMENTS