தீபாவளி ஸ்பெஷல் தினை அல்வா diwali festival of alva Tamil
தீபாவளி ஸ்பெஷல் தினை அல்வா diwali festival of alva Tamil
diwali festival of alva Tamil |
தீபாவளி ஸ்பெஷல் தினை அல்வா diwali festival of alva Tamil
தேவையான பொருட்கள்
- தினை அரிசி -200 கிராம்
- வெல்லம் -200 கிராம்
- ஏலக்காய் தூள் -அரை தேக்கரண்டி
- சுக்கு தூள் -2 சிட்டிகை
- முந்திரி -10 கிராம்
- திராட்சை -10 கிராம்
- பாதாம் பருப்பு-10 கிராம்
செய்முறை :
தினை அரிசி மாவுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும் .
சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி கரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக விட்டு , நன்றாக கிளறவும் .
இந்தக் கலவையானது கட்டி சேராத வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் .
இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்க்கவும் .
சட்டியில் ஒட்டாமல் வரும் போது , நெய்யில் வறுத்த முந்திரி , பாதாம் பருப்பு . திராட்சை , சுக்குதூள் மற்றும் ஏலக்காய் தூள் இவற்றை தூவி இறக்கவும் .
இப்போது தித்திக்கும் தினை அல்வா நமக்கு ரெடி .
- பலன்கள் :
தினை என்ற இந்த சிறு தானியத்தில் புரதச் சத்து , நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது . ஆகையால் இது ஒரு சத்தான உணவு .
இதனுடன் இனிப்பு பொருட்கள் சேர்வதால் அதில் உள்ள நுன் சத்துக்கள் அதிகமாகும் . இது வைட்டமின்கள் நிறைந்த அருமையான உணவாகும் .
திணை இனிப்பு தோசை தேவையான
- பொருட்கள் :
- திணை மாவு -பொடி 2 கப்
- வெல்லம்-அரை கப்
- செய்முறை :
திணை மாவு வெல்லம் , ஏலக்காய் தூள் . தண்ணீர் ஊற்றி தோசை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் .
அதை கிண்ணத்தில் ஊற்றிக்
கொள்ளவும் . தவாவை காய வைத்து அதில் தோசை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும் .
இப்போது சுவையான திணை இனிப்பு தோசை ரெடி .
அரிசி ஒரு சிறு தானிய வகைகளும் ஒன்றாகும் . இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகின்றது . இந்தத் தானியத்தின் மாவு மூலம் உப்புமா , புட்டு , கேக் . பிஸ்கட் செய்யலாம் .
- பயன்கள் :
1 . எறும்புகளுக்கு இடையிலான தசைகளை நன்கு வலுவடையச் செய்வதற்கு சாமை அரிசி உதவுகின்றது .
இது மலச்சிக்கலை போக்க வல்லது இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியைப் போக்கும் தன்மை கொண்டது .
வயிற்றுத் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும் .
ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கவும் , ஆண்மையை பெருக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது சாமை அரிசி.
நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாமை அரிசியால் சமைக்கப்பட்ட உணவை உண்ணலாம் .
தினைச் சோறு
- தேவையான பொருட்கள் :
1. கல் அரித்த தினை அரிசி 1 கப்
- செய்முறை :
ஒரு பங்கு தினை அரிசிக்கு 2 பங்கு தண்ணீருடன் கழுவி , கல் அரித்து எடுத்த தினை அரிசியை குக்கரிலில் | மூன்று விசில் விட்டு இறக்கவும் .
தினைச் சோறுடன் துவையல் , சாம்பார் , ரசம் , ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
தினை அரிசியைக் கொண்டு மேலும் சில உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன .
இங்கே சில உணவு வகைகளின் தேவைப்படும் பொருட்களைக் கொடுத்துள்ளோம் . அதைப் பயன்படுத்தி சமைத்து ருசித்து பயன் பெறுங்கள்
COMMENTS