மாரடைப்பு இதயநோய் நிபுணர் சொன்ன தகவல்
#மாரடைப்பு சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. *மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு* S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!* மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது, *SMILE (சிரிக்க சொல்வது),* *TALK (பேச சொல்வது),* *RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)* இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூ...