சிறுநீரகம் இடுப்பில் முள்ளந்தண்டின் அருகே நாலைந்து அங்குல நீளத்தில் இருபுறமுள்ள சிறுநீரகம் ( கிட்னி ) இரத்தத்திலுள்ள அமுரியைப் பிரித்து குருதியைத் தூய
Remedies for kidney stones tamil
சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள்
சிறுநீரகம் இடுப்பில் முள்ளந்தண்டின் அருகே நாலைந்து அங்குல நீளத்தில் இருபுறமுள்ள சிறுநீரகம் ( கிட்னி ) இரத்தத்திலுள்ள அமுரியைப் பிரித்து குருதியைத் தூய்மையாக்கும் .
ஒவ்வொரு சிறுநீரகத்திலிருந்து ஒவ்வொன்று வீதம் இருகுழல்கள் கிளம்பி .
அடிவயிற்றின் நடுவில் கிடக்கும் நீர்ப்பையை நாடியோடி அதனுடன் பொருந்தும் , சிறுநீர் சொட்டுச் சொட்டாய் அந்த குழல்களில் வழியாய் இறங்கி நீர்ப்பையை அடையும் .
இதுவும் இருதயம் போல் முக்கியமான வேலையைச் செய்கின்றன .
சிறுநீரகத்தினின்று மணல் சிறிய கல் முதலியன குழாய் மூலம் கீழிறங்கி நீர்ப்பையில் தங்குவதால் காணும் நீரடைப்பே கல்லடைப்பு ஆகும் .
இதனால் சகிக்க முடியாத துன்பத்துடன் இடுப்பு வலி ஏற்படும் . நிவாரணம்
1.கோதுமை , ஓட்ஸ் , பாதாம் , முந்திரி , மீன் . பார்லி . பீன்ஸ் போன்றவைகளை சாப்பாட்டில் சேர்த்தால் மெக்னீசியம் என்ற சத்து அதிகமாகி ( கிட்னீ ) கோளாறுகள் நீங்கும் .
2.வெந்தயம் அல்லது வெந்தய கீரையை தினசரி உணவில் சாப்பிட்டு வரலாம் .
3. விராலி மஞ்சள் இலைகள் 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வரலாம் . பழம்
4. 50மி.லி. பாவற்காய் சாற்றில் மோர் கலந்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் நீங்கும் .
5.திராட்சைப் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பை தடுப்பதுடன் , கிட்னியில் கல் ஏற்படுவதைத் தடுக்கும் . கண் பார்வையும் கூர்மையாகும் .
6. அத்தி மரவேரிலிருந்து எடுக்கப்படும் கள் ( நீர் ) குடித்து வர குணப்படுத்தும் . சர்க்கரை நோய் மற்றும் கிட்னி கோளாறுகளை
7. வெண்டைக்காய் விதைகளைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டுக் காய்ச்சி மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் நீங்கும் .
8. தோற்றாங்கொட்டையை பவுடராக்கி பசும்பானுடன் சேர்த்து சாப்பிட்டு வரவும் .
9. ஒரு பிடி நெருஞ்சி இலைகளை ஒன்றிரண்டாக நசுக்கி .
2 பங்கு நீர் விட்டு காய்ச்சி . அது ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டி தினமும் இருவேளை பருகி வர கல்அடைப்பு . நீர்கடுப்பு . ரத்தத்தில் உப்புச்சத்து மிகுதி போன்றவை நீங்கும் .
சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள்
1. வாழைத்தண்டு கூட்டு & குழம்பு நல்லது . 2. வாழைத்தண்டை பச்சையாகவே சாறு பிழிந்து அல்லது தயிரில் பச்சடியாகவாவது செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள விஷப்பூச்சிகள் நீங்குவதுடன் மூத்திரப்பை கற்கள் நீங்கும் .
3.நெருஞ்சிகல் குடிநீர் அல்லது நீர்முள்ளிக் குடிநீர் இவை கிட்னியில் கல்லடைப்பை நீக்கும் .
4. அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி , அதனுடன் பால் , சர்க்கரை சேர்த்து குடித்து வர சிறுநீர் சம்பந்தமான கல்லடைப்பு நீங்கும் .
5. திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்துச் சாப்பிட்டு வர கல்லடைப்பு கட்டுப்படும் .
6. சோளம் இடித்து மாவாக்கி களியாகக் கிண்டி சாப்பிட்டு வர சிறுநீர் கல்லடைப்பு & நீர்ச்சுருக்கல் , இருமல் , கக்குவான் போன்ற நோய்கள் குணமாகும் .
7. மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து . தேநீர் போல் அருந்தி வந்தால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கற்கள் நீங்கும் .
8. கற்பூர வள்ளி இலையுடன் செடியை கஷாயமிட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும் .
9. கோவைக்காயை அரைத்து நீரில் கலந்து கொதிக்க வைத்து அதன் சாற்றைக் காலை & மாலை பருகி வந்தால் சிறுநீர் கல்லடைப்பு & சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் .
10. சுரைக் கொடி . நீர் முள்ளி , வெள்ளரி விதை இவை மூன்றையும் சமஅளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர நீர் எரிச்சல்.கல் அடைப்பு நீங்கும் .
11. அசோகுமரத்து விதையை உலர்த்திபொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரகத்தில் ஏற்படும் கல் கரையும் .
12. கேரட் , திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றே குடித்தாலே கிட்னி கற்கள் கரையும் .
13. நிறைய காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு கிட்னியில் கல் பயமே தேவையில்லை .
14. சிற்றாமணக்கு விதத்தின் ஓட்டை நீக்கி பருப்பை ஒன்று இரண்டாக பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து குணமாகும் . ஒற்றடமிட நீரடைப்பு . கல்லடைப்பு & பக்கவலி போன்றவை குணமாகும்.
பொடுகுநீங்கும் தலைமுடி உதிராது டிப்ஸ்
COMMENTS