Tirupur district of India
திருப்பூர்மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இது அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம்.
இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களை கொண்டு உருவாகி உள்ளது.
இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களை கொண்டு உருவாகி உள்ளது.
இம்மாவட்டம், தமிழகத்தின் 32-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், நல்ல முன்னேற்றம் அடைந்த மாவட்டம் மட்டுமல்லது, தமிழகத்தின் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டம் ஆகும்.
தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும்.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
இது சென்னையில் இருந்து தென்மேற்காக 448 கி.மீ தொலைவில் அமந்துள்ள நகரமாகும்.
திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் ரோடு, அவிநாசி ரோடு, பெருமாநல்லு}ர் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு விளங்குகின்றன.
குமரன் ரோடு மிக முக்கியச் சாலையாக விளங்குகிறது.
சோழன் செங்கண்ணனுக்கும் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இங்கு போர் நடந்தது.
திருப்பூர் பெயர்க்காரணம் :
சோழன் செங்கண்ணனுக்கும் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இங்கு போர் நடந்தது.
இரும்பொறை மிகப் பெரிய வீரனாக இருந்தாலும் அந்தப் போரில் சோழன் வெற்றி பெற்றான்.
சேரனை சிறைப் பிடித்தான்.
யுத்த தர்மப்படி கைது செய்யப்படும் மன்னனுக்குச் சில மரியாதைகள் தரப்பட வேண்டும்.
யுத்த தர்மப்படி கைது செய்யப்படும் மன்னனுக்குச் சில மரியாதைகள் தரப்பட வேண்டும்.
ஆனால், இரும்பொறையைச் சிறையில் அவமதிக்கிறார்கள்.
மானமே பெரிது என நினைத்த அவன் உண்ணாமல், உறங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு உயிர்த் துறக்கிறான்.
மானத்துக்காக சேரன் உயிர்விட்ட பெருமை மிகு இடம் என்பதால் இவ்வூரை, 'திரு'ப்போர் என்று அழைத்தனர்.
அந்தத் திருப் போர்தான் மருவி இன்று திருப்பூர் ஆகிவிட்டது.
திருப்பூர் அமைப்பு :
திருப்பூர் மாவட்டம் தமிழகத்தின் மேற்கு மாவட்டமாக அமைந்துள்ளது. இம்மாவட்டம், தனது மேற்கு எல்லையை கோயம்புத்தூர் மாவட்டத்துடனும், வடக்கு மற்றும் வடகிழக்கில் ஈரோடு மாவட்டமும், கிழக்கில் கரூர் மாவட்டமும், தென்கிழக்கில் திண்டுக்கல் மாவட்டமும் உள்ளது.
தெற்கில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் உள்ளது.
இம்மாவட்டம், 5,106.12 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது ஆகும்.
இம்மாவட்டத்தில் தெற்க்கு மற்றும் தென்மேற்கிள் அதிக மழை பெறுகிறது, இதற்கு காரணம், இதை சுற்றி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்.
ஆறுகள் :
ஓடும் முக்கிய ஆறுகள், நொய்யல் மற்றும் அமராவதி ஆகும்.
அமராவதியே இம்மாவட்டத்தின், விவசாய நிலங்களுக்கு இன்றியமயாததாகும்.
அமராவதிநகரில் உள்ள அமராவதி நீர்த்தேக்கத்தில் இருந்து, அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில், திருமூர்த்தி அணை மற்றும் உப்பார் அணையும் உள்ளது.
சிறப்பு :
வேல்லிங்கிரி மலையில் இருந்து உருவெடுக்கும் ஆறான நொய்யல் ஆறு இந்நகரின் குறுக்கே பாய்ந்து செல்வது இந்நகரின் சிறப்பம்சம்.
அதே போல் ஊத்துக்குளி வென்னை மிகவும் புகழ் பெற்றது ஆகும். திருப்பூர், பனியன் ஏற்றுமதிக்கு மிகவும் பெயர் பெற்ற மாவட்டம் ஆகும்.
திருப்பூர் மக்கள் தொகை :
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி திருப்பூர் மாவட்டத்தின்
மொத்த மக்கட்தொகை 2,479,052 ஆகும்.
- இவற்றில் ஆண்கள் 1,246,159
- பெண்கள் 1,232,893 ஆகும்.
வருவாய் கோட்டங்கள்:
- திருப்பூர்
- உடுமலைப்பேட்டை
- தாராபுரம்
வருவாய் வட்டங்கள்:
- திருப்பூர்
- அவினாசி
- பல்லடம்
- உடுமலைப்பேட்டை
- தாராபுரம்
- காங்கேயம்
- மடத்துக்குளம்
மாநகராட்சி :
திருப்பூர்ஃதிருப்போரூர்புரம்
நகராட்சிகள்:
பேரூராட்சிகள்:
திருப்பூர்ஃதிருப்போரூர்புரம்
நகராட்சிகள்:
- காங்கேயம்
- வெள்ளக்கோயில்
- பல்லடம்
- உடுமலைப்பேட்டை
- தாராபுரம்
- வேலம்பாளையம்
- ளு.நல்லு}ர்
- அவினாசி
- மடத்துக்குளம்
- கணியூர்
- கொமரலிங்கம்
- சாமலாபுரம்
- சங்கரமநல்லு}ர்
- தளி
- திருமுருகன்பூண்டி
- கன்னிவாடி
- குன்னத்தூர்
- குளத்துப்பாளையம்
- மூலனு}ர்
- ஊத்துக்குளி
- முத்தூர்
- ருத்திராவதி
- சின்னக்கம்பாளையம்
திருப்பூரின் தொழில் வளம்:
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரம் திருப்பூர் . லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் .
தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது.
பொருளாதாரம் :
பொருளாதாரம் என்பது இந்நகரைச் சுற்றியமைந்துள்ள பருத்தி பொருட்கள், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத்தயாரிப்பாளர்களை சார்ந்து அமைந்துள்ளன.
இப்பகுதியின் வெப்பமான மற்றும் வறட்சியான தட்பவெப்ப சூழல் இம்மாதிரி நிறுவனங்கள் இயங்குவதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் இறை வழிபாட்டு தலங்கள் :
திருப்பூர் திருப்பதி:
திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் திருப்பூர் திருப்பதி கோவில் ஆகும்.
திருப்பூர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
கைலாசநாதர் திருக்கோயில்:
போயம்பாளையம் பிரிவு மேற்கு கங்கா நகரில், கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோயில்:
அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோயில் திருப்பூர் பெரியபாளையம் என்றும் சர்க்கார் பெரிய பாளையம் என்றும் வழங்குகின்றது.
சுக்ரீஸ்வரர் ஆவுடை அம்மன் கோயில் ஊருக்கு மேற்கில் 1 கி,மீ ல் வயல்வெளியில் கோயில் உள்ளது. சுக்ரீவன் வழிபட்டதால் குரக்குத்தனி என்று பெயர் பெற்றது.
பூண்டி முருகன் திருக்கோயில்:
இத்தலம், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. அவினாசி-திருப்பூர் சாலையில் அவினாசியிலிருந்து சுமார் 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன.
கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்@ இடப்புறத்தில் ஞானதீர்த்தம்@ வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் :
அமராவதி அணை :
அமராவதி அணை இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் அமராவதிநகரில் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது.
உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 17இல் 25 கிமீ (15.53 மைல்) தொலைவில் உள்ளது.
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆழமான அணையால் பரந்த நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது.
அமராவதி முதலைப் பூங்கா:
அமராவதி சாகர் முதலைப் பண்ணை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு குட்டி முதலைகளை வளர்த்து பெரியவையானதும் இயற்கைச்சூழலில் விடப்படுகிறது.
நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன.
இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம்.
திருமூர்த்தி அணை :
திருமூர்த்தி அணை தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இடைநிலை நீர்த்தேக்கம் ஆகும்.
இதன் உயரம் 60 அடிகளாகும். இது திருமூர்த்தி மலையை அடுத்து அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி கோவில் புகழ் வாய்ந்தது.
பஞ்சலிங்கம் அருவி :
மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள மூலிகை குணமுள்ள பஞ்சலிங்கம் அருவி மிக பிரபலமானது.
இந்திராகாந்தி வனவிலங்குகள் சரணாலயம் :
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா (ஐபுறுடுளுரூNP) ஓர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
1961ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இங்கு வருகை புரிந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நினைவையொட்டி இப்பெயர் இடப்பட்டுள்ளது.
திருப்பூர் குமரன் நினைவிடம் :
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நு}ல் நிலையம் உள்ளது.
படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
COMMENTS