வாய்வழி வாய்புன் தொற்றுகளுக்கு என்ன தீர்வு
வாய்வழி வாய்புன் தொற்றுகளுக்கு என்ன தீர்வு
வாய்வழி வாய்புன் தொற்றுகளுக்கு என்ன தீர்வு |
வாய்வழி வாய்புன் தொற்று
வாய் என்பது சுவை அறியுமிடம் . இங்கு உமிழ்நீர் கோளம் பக்கத்திற்கு இரண்டாய் நாவினடியிலும் , தாடையுள்ளும் , பாடும் மொழியின் பிறப்பிடமும் ஆகும் . வாயில் நாற்றம் காதையடுத்தும் உள்ளன . வாய் அசை போடுவதுடன் , வசை என்றால் வயிற்றின் கோளாறும் , வயிற்றிலும் புண் இருக்கும் என்று கூறலாம் . எனவே நிவர்த்தியும் பார்ப்போம் .
வேப்பிலையை காயப் போட்டு தூள் செய்து 3 அல்லது 4 துளி எலுமிச்சை சாறு விட்டு தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் மாறும் .
தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண் , தொண்டை புண் குணமாகும் .
அகத்திக் கீரையை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண் வராது . இரத்தக் கொதிப்பும் கட்டுப்படும் .
அத்திக் கொழுந்தை அதிகாலையில் ஒருபிடி மென்று தின்றால் வாய்ப்புண் ஆறும் .
ஆலம் விழுதிலுள்ள முளைகளைக் கடித்து மென்று சாப்பிட வாய்ப்புண் ஆறும் .
முல்லைப்பூ இலையை வாயில் இட்டு மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும் .
பிஞ்சிக் கடுக்காயை வாயில் ஒதுக்கிக் கொண்டு சிறிது சிறிதாக உமிழ்நீரை விழுங்கி வர வாய்ப்புண் ஆறுவதுடன் மலச்சிக்கல் அகலும் .
வன்னிக்காயை அல்லது அத்திமர இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாயைக் கொப்பளிக்க வாய்ப்புண் நாக்கு வீக்கம் & வலி அகலும் .
பல் போனால் சொல் போச்சு " என்னும் முதுமொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது . மிகவும் அவசியம் . வாதம் , பித்தம் , கபம் அதிகரித்தால் பற்கள் கருமையாக , மஞ்சளாக மாறும் வெண்ணிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்ப
தொண்டைக்குப் பரவி சில சமயங்களில்
ஆதாரத்தையும் பாதிக்கும் .
எனவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .
நிவாரணம்
இனிப்பு அடிக்கடி ' சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்படும் . எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும் .
தேநீர் , காபி போன்றவற்றை அடிக்கடிக் குடிப்பதும் , குளிர்ந்த நீரைக் குடிப்பதும் கூடாது .
பப்பாளிச் செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டு வலியுள்ள பல் மீது தடவி பல்வலி தீரும் .
ஆலம் மொட்டை அல்லது பாகற்காய் இலையை அல்லது நந்தியா வட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால் நன்றாக மென்று வாயிலே அடக்கி வைத்து பிறகு துப்பிவிட பல்வலி நீங்கும்
அத்திமரத்து இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வெது , வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க வாய்ப்புண் , பல் ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும் .
வன்னிக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது , வெதுப்பாக இருக்கும் போது வாயைக் கொப்பளிக்க பல் ஈறுகள் வீக்கம் வலி நீங்கும் . நாக்கு & வாய்ப்புண் ஆறும் ,
வாகை வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி வெது , வெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய்புண் குணமாகும் . பல்ஈறு உறுதியாகும் .
பப்பாளிப் பழத்தை தொடர்ந்து நான்கு , ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் சர்க்கரை சத்து சேர்ந்து விடும் என்று பயம் வேண்டாம் .
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது . முடிந்தவரை காரத்தை குறைத்து சாப்பிடுங்கள் . தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும் .
பற்பொடி தயாரிப்பு
விதை நீக்கிய கடுக்காய் 4. தான்றிக்காய் 4 , சுக்கு 2 , மிளகு 2 , மாசிக்காய் 2 , அதிமதுர வேர் 2 குச்சி , காசுகட்டி 20 கிராம் , கல்நார் 10 கிராம் , ஏலக்காய் 10 கிராம் , மருதம்பட்டை 100 கிராம் ஆகிய பங்கு அளவில் வறுத்தக் கலந்து பொடித்துச் சலிக்கவும் . தேவையான அளவு இந்துப்பூ சூடன் ஆகியவற்றை கலக்கவும் . இதனால் பல் துலக்கி வர பல்வலி , பல்லசைவு , ஈறுவீக்கம் , பற்சொத்தை , குருதி முதலியன நீங்கி பற்கள் வலிவு பெறும் .
பொடித்த கற்பூரம் கால் தேக்கரண்டி , வேப்பந்தூள் அரை தேக்கரண்டி , உப்புத் தூள் அரை தேக்கரண்டி , சர்க்கரைத் தூள் 1 தேக்கரண்டி அளவில் சேர்த்து 4 துளி எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து வாரம் 2 முறையாவது இந்த கலவை பற்பொடியில் பல் தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவதுடன் பற்களின் கரையும் விலகி பற்கள் பளீர் பளீர் என வெண்மை ஆகும் இந்த இந்த பவுடரை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் மாறும் .
கற்றைக் காம்பு 10 கிராம் , படிகாரம் 10 கிராம் , சீமைச் சுண்ணாம்பு 25 கிராம் , கிராம்பு 25 கிராம் அளவில் சேர்த்து பொடித்துச் சலித்த பற்பொடியினால் காலை , மாலை பல்
தேய்த்து வர ரத்தக் கசிவு பற் ஈறில் புண்கள் குணமாகும் .
ஆலம் விழுது , வேப்பம்பட்டை , கருவேலம்பட்டை , களிப் பாக்கு , காய்ச்சுக் கட்டி வகைக்கு 50 கிராம் , கரிசாலை 25 கிராம் , கல்நார் 10 கிராம் , உப்பு செந்தூரம் 10 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்து பொடியாக்கி , இந்த பற்பொடி யால் பல்துலக்கி வர பல்வலி கூச்சம் , பல் ஆடுதல் நீங்கும் புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்ற வையுங்கள்.பின் 500 மிலி நல்லெண்ணையில் கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சுங்கள் அது மெழுகு பதம் வரும் போது நாம் முதலில் செய்த புங்கம்பட்டை கஷாயத்தை சேர்த்து காய்ச்சி இறக்கி விடவும் இந்தக் கலவை எண்ணெய்யைக் கொண்டு தினமும் 2
வேளை வாய் கொப்பளித்து வர பல்வலி பல்கூச்சம் ஆகியவை தீருவதுடன் பல்ஈறு உறுதியாகும் பல்சொத்தை ஏற்படாமல் தடுக்கும் .
COMMENTS